26th November 2025 12:28:25 Hours
இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவினரால் 2025 நவம்பர் 23 அன்று இலங்கை இராணுவ போர் கருவி படையணி தலைமையகத்தில் உதவித்தொகை வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது. இந்த நிகழ்வில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகள் பெற்ற இலங்கை இராணுவ போர் கருவி படையணி உறுப்பினர்களின் 28 பிள்ளைகள் அங்கீகரிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் உபகரண பணிப்பாளர் நாயகமும் இலங்கை இராணுவ போர்கருவி படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூ.எம்.எஸ்.என் விஜேகோன் என்டிசீ எஎடிஓ மற்றும் இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஷிராணி நிர்மலின் விஜேகோன் ஆகியோர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கலாசார நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் தொடர்ந்து மாணவர்களுக்கு பாடசாலை பைகள், எழுதுபொருட்கள் மற்றும் ஏனைய கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், புலமைப்பரிசில் பெறுபவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.