25th November 2025 13:52:27 Hours
இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஆயிஷா லியனகே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவு 2025 நவம்பர் 19 ஆம் திகதி இலங்கை சமிக்ஞை படையணி கேட்போர் கூடத்தில் புத்தக நன்கொடை வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.
2026 ஆம் ஆண்டில் முதலாம் வகுப்பில் இணையும் பிள்ளைகளுக்குத் தேவையான அனைத்து பாடப்புத்தகங்களின் தொகுதி 30 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் ஒரு பாடசாலை பை மற்றும் பாடசாலை காலணிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியின் ஆரம்ப கட்டத்திற்கு மேஜர் ஜெனரல் நிலந்த ஹெட்டியார்ச்சி (ஓய்வு) வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ எச்டிஎம்சீ, அவர்கள் திரு.கோசல அழகியவண்ண, திருமதி அமில அழகியவண்ண, திரு.சுமித் பொன்சேக்கா மற்றும் திருமதி ஷியாமா பொன்சேக்கா ஆகியோருடன் அனுசரணை வழங்கினர்.
இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.