25th November 2025 13:58:45 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவு, இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் 144 வது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும் விதமாக 2025 நவம்பர் 05 ஆம் திகதி இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் நிதியுதவி வழங்கும் நன்கொடை திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த நிகழ்ச்சியின் போது, மறைந்த சார்ஜன் எச்.டி. ஜயவீர (ஓய்வு) ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் குடும்பத்தினரின் பகுதியளவு கட்டப்பட்ட வீட்டை நிறைவு செய்வதற்காக ரூ.300,000.00 நன்கொடையாக வழங்கப்பட்டது. மேலும், குளியலறை வசதியை நிர்மாணிப்பதற்கும், குடியிருப்பு பிரதேசத்தில் நிலச்சரிவு தொடர்பான சேதத்தைத் தடுக்க எல்லைப் பக்கச் சுவர் கட்டுவதற்கும் இரண்டு சிவில் ஊழியர்களுக்கு தலா ரூ.100,000.00 பெறுமதியான இரண்டு நிதியுதவி வழங்கப்பட்டது.
பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களுடன் இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தர்ஷனி யஹாம்பத், இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.