Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

20th November 2025 14:23:48 Hours

வெலிசர சுவாச நோய் தேசிய மருத்துவமனை புனரமைப்பு பணிகளை இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி பார்வையிடல்

இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தொடர்ச்சியான நலன்புரி முயற்சிகளின் ஒரு பகுதியாக, பொதுமக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், வெலிசர சுவாச நோய்களுக்கான தேசிய மருத்துவமனையில் புனரமைப்பு பணிகள் 2025 ஒக்டோபர் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன. இந்த திட்டம் பாதுகாப்பு அமைச்சின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி வைத்தியர் ரசிக்க பெரேரா அவர்களினால் ஒருங்கிணைக்கப்பட்டு, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி திசாநாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்பட்டன.

புனரமைப்பு பணிகளின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்காக, 2025 நவம்பர் 18 ஆம் திகதி ஒரு ஆய்வுப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. வைத்தியர் ரசிக்க பெரேரா மற்றும் திருமதி சுவேந்திரினி திசாநாயக்க ஆகியோர் இணைந்து மருத்துவமனையின் மேம்பாடுட்டு வசதிகளையும் பார்வையிட்டனர்.

இந்த விஜயத்தின் போது, இரு தலைவிகளும் 1வது பொறியியல் சேவைகள் படையணி மற்றும் 6 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினரைப் பாராட்டி, ஊக்குவித்ததோடு, அவர்களின் மன உறுதியை உயர்த்தியதோடு, நோயாளி பராமரிப்பை மேம்படுத்துவதில் அவர்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர்.