19th November 2025 14:21:55 Hours
இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் கம்புருபிட்டியவில் உள்ள 'அபிமன்சல-II' க்கு 2025 நவம்பர் 14 அன்று விஜயம் செய்தனர்.
இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் பிரதித் தலைவி திருமதி ஷியாமா ஹெட்டிகே அவர்கள் இவ் விஜயத்தில் பங்குபற்றினார்.
தங்கள் பங்களிப்பின் ஒரு பகுதியாக, இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவினால், நலவிடுதியில் உள்ள போர் வீரர்களின் பயன்பாட்டிற்காக ரூ.200,000 மதிப்புள்ள மின்சார கேத்தல்கள், படுக்கை விரிப்புகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை நன்கொடையாக வழங்கியதுடன், சூடேற்றும் அலுமாரிகள் மற்றும் தண்ணீர் கீசர்களை பழுதுபார்க்கப்பட்டது.
இந்த விஜயத்தின் போது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி பீட் இசைக்குழுவினரால் இசை அமர்வும் இடம்பெற்றது. இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.