19th November 2025 14:25:51 Hours
கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவு 2025 நவம்பர் 15 அன்று கம்புருப்பிட்டியில் உள்ள அபிமன்சல-2 நலவிடுதிக்கு விஜயம் செய்தனர்.
இந்நிகழ்வில் முதலாம் படை தளபதியும் கொமாண்டோ படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் கேஎச்எம்எஸ் விக்ரமரத்ன ஆர்எஸ்பீ அவர்கள் கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி சமிந்தி விக்ரமரத்ன அவர்களுடன் கலந்து கொண்டார்.
இந்த விஜயத்தின் போது சேவை வனிதையர் பிரிவு தலைவி நலவிடுதியின் போர் வீரர்களின் நீண்டகால மருத்துவத் தேவைகளை ஆதரிப்பதற்காக இரத்த குளுக்கோஸ் கண்காணிப்பு அமைப்பு மற்றும் சோதனை கீற்றுகளை தனிப்பட்ட முறையில் நன்கொடையாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் போர் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆசிர்வாதம் வேண்டி ஒரு மத அனுசரிப்பும், அதைத் தொடர்ந்து சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டன.
கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இவ் விஜயத்தில் பங்கேற்றனர்.