Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

17th November 2025 19:11:23 Hours

இலங்கை இராணுவ முன்னோடிப் படையணி சேவை வனிதையரால் மூன்று பிள்ளைகளின் குடும்பத்திற்கு நிதி மற்றும் பொருளுதவி

இலங்கை இராணுவ முன்னோடிப் படையணி சேவை வனிதையர் பிரிவினால் 2025 நவம்பர் 14 ஆம் திகதி 2 வது இலங்கை இராணுவ முன்னோடிப் படையணியில் 2 வது இலங்கை இராணுவ முன்னோடிப் படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரிக்கு அத்தியாவசியப் பொருட்களுடன் ரூபாய் 20,000.00 பெறுமதியான நிதியுதவியும் வழங்கப்பட்டது. அதிகாரவாணையற்ற அதிகாரியின் மனைவி சமீபத்தில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்ததால் இந்த உதவி வழங்கப்பட்டது.

இலங்கை இராணுவ முன்னோடிப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி எச்.ஜி. சுவர்ணலதா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் பங்கேற்புடன் இந்த நிகழ்வு நடாத்தப்பட்டது.