Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

13th November 2025 14:01:08 Hours

முதலாம் படையின் ஏற்பாட்டில் பாடசாலை உபகரணங்கள் நன்கொடை

முதலாம் படையின் ஏற்பாட்டில் மலையாளபுரம், கிளி/திருவள்ளுவர் ஆரம்ப பாடசாலையில் 2025 நவம்பர் 7 ம் திகதி அன்று பாடசாலை உபகரணங்கள் நன்கொடையாக வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வறிய குடும்பங்களைச் சேர்ந்த 40 மாணவர்கள் அத்தியாவசிய பாடசாலை பொருட்களை நன்கொடையாக வழங்கப்பட்டதுடன் இத்திட்டத்திற்கு கொமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சமிந்தி விக்ரமரத்ன அவர்கள் நன்கொடை வழங்கினார்.

முதலாம் படை தளபதியும் கொமாண்டோ படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கேஎச்எம்எஸ் விக்ரமரத்ன ஆர்எஸ்பீ அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

அனைத்து மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு தேநீர் விருந்து மற்றும் மதிய உணவு வழங்கலுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.