10th November 2025 12:47:21 Hours
இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் பிரிவினால் 2025 நவம்பர் 01 ஆம் திகதி இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி தலைமையகத்தில் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில், இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜே.எஸ்.பி.டபிள்யூ. பல்லேகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ மற்றும் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி குமாரி பல்லேகும்புர ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்து விளங்கிய 87 மாணவர்கள், க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 9 ஏ சித்திகளைப் பெற்ற 13 மாணவர்கள் மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 3 ஏ சித்திகளைப் பெற்ற 2 மாணவர்கள் உட்பட மொத்தம் 102 மாணவர்களின் சிறப்பான கல்வி சாதனைகளுக்காக பாராட்டப்பட்டனர்.
மேலும், க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு அவர்களின் உயர் கல்வியை மேலும் ஆதரிக்கும் வகையில் இரண்டு டெப்லெட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன.
இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் மற்றும் அவர்களது பிள்ளைகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.