Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

08th November 2025 09:46:46 Hours

இலங்கை இராணுவ கவச வாகனப் படையணி சேவை வனிதையர் மிஹிந்து செத்மெதுரவிற்கு விஜயம்

இலங்கை இராணுவ கவச வாகனப் படையணி சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி சுமங்கலி பத்திரவிதான அவர்கள் இலங்கை இராணுவ கவச வாகனப் படையணி சேவை வனிதையர் பிரிவு உறுப்பினர்களுடன் 01 நவம்பர் 2025 அன்று அத்திட்டிய மிஹிந்து செத்மெதுர நலவிடுதிக்கு விஜயம் செய்தனர்.

இந்நிகழ்வு, நலவிடுதியின் போர்வீரர்களின் அன்பான வரவேற்புடன் ஆரம்பமாகியது. பின்னர், இலங்கை இராணுவ கவச வாகனப் படையணி சேவை வனிதையர் பிரிவு உறுப்பினர்கள், நலவிடுதியின் தேவைகளை அடையாளம் காண வார்டுகளுக்குச் விஜயம் மேற்கொண்டனர். இவ் விஜயத்தின் போது இலங்கை இராணுவ கவச வாகனப் படையணி இசைக்குழு வழங்கிய பொழுதுபோக்கு அமர்வும் இடம்பெற்றது.

இலங்கை இராணுவ கவச வாகனப் படையணி சேவை வனிதையர் பிரிவு தங்கள் பங்களிப்பின் ஒரு பகுதியாக, நல விடுதியின் பயன்பாட்டிற்கு ரூ. 50,000 மதிப்புள்ள CFL மின்குமிழிகளை நன்கொடையாக வழங்கியது. மேலும், புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் கொண்ட பாடசாலை பைகள் நலவிடுதியில் சிகிச்சை பெரும் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டன.