08th November 2025 09:44:55 Hours
இப்பலோகம விரு கெகுலு பாலர் பாடசாலையின் வருடாந்த கலை நிகழ்வு, 2025 நவம்பர் 02 அன்று அன்று கெக்கிராவ மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி திசாநாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்ட இந்த நிகழ்வில், "அலைகளை உருவாக்கும் கடல் தேவதையாக மாறுங்கள்" என்ற கருப்பொருளின் கீழ் பாலர் பாடசாலையின் படைப்புத் திறமைகளைக் கொண்டாடினர்.
இந்நிகழ்வில் இப்பலோகம விரு கெகுலு பாலர் பாடசாலை சிரேஷ்ட உறுப்பினர் திருமதி அனுஷானி குலதுங்க அவர்கள் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கேஎம்பீஎஸ்பி குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள்,சிப்பாய்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்குபற்றினர்.