06th November 2025 13:52:10 Hours
இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவினர் மஹரகம அபேக்ஷா மருத்துவமனையுடன் இணைந்து, இலங்கை சமிக்ஞை படையணி தலைமையகத்தில் 2025 ஒக்டோபர் 31 அன்று இரத்த தான நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்வின் போது அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் தாமாக முன்வந்து இரத்த தானம் செய்தனர்.
இராணுவத்தின் பிரதம சமிக்ஞை அதிகாரியும், இலங்கை சமிக்ஞை படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜீஎல்எஸ்டபிள்யூ லியனகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஆயிஷா லியனகே அவர்களுடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.