Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

04th November 2025 14:56:18 Hours

இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி சேவை வனிதையரால் மூக்குகண்ணாடிகள் நன்கொடை

இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவினரால் லயன்ஸ் சர்வதேச மாவட்டம் 306 D7 உடன் இணைந்து, 2025 நவம்பர் 01, அன்று இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி தலைமையகத்தில் மூக்குகண்ணாடிகள் நன்கொடையாக வழங்கும் திட்டத்தை முன்னெடுத்தனர்.

இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் படைத் தளபதி பிரிகேடியர் எம்கேஎஸ்எஸ் டி சில்வா அவர்கள் இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி பீ.என்.கே. டி சில்வா அவர்களுடன் இணைந்து இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

அனைத்து பங்கேற்பாளர்களும் விஷேட கண் மருத்துவர்கள் நடத்திய கண் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர், மேலும் பத்து பெற்றோர்கள் இலவச கண்புரை அறுவை சிகிச்சைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர், இது அவர்களின் கண் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேலும் ஆதிகரிப்பதாகும்.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், மஹரகம மத்திய லயன்ஸ் கழக திட்டத் தலைவர் திருமதி தாமரா தெமட்டபிட்டிய மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.