02nd November 2025 10:26:07 Hours
பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவு, 2025 ஒக்டோபர் 11 அன்று மஹரகம சுசரிதோதயோ சிறுவர் இல்லத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.
பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி அனுபமா ரத்நாயக்க அவர்கள் இந்த விஜயத்தில் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் காலை தேநீர், மதிய உணவு, வேடிக்கை விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவை அடங்கும். சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதுடன் மேலும் மையத்தின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய உலர் உணவுப் பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட கிட்டத்தட்ட 100 பேர் கலந்து கொண்டனர்.
பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.