31st October 2025 16:04:51 Hours
கேகாலை நில்வாக்க விலாகலையில் வசிக்கும் திரு. மாரசிங்க என்பவருக்கான வீட்டுத் திட்டத்தை இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவு வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் நிதியுதவியில் இந்தத் திட்டம், 2025 மே 25 அன்று 4வது இலங்கை பீரங்கி படையணியின் கட்டளை அதிகாரியின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ், படையினரின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்டது.
நிறைவுசெய்யப்பட்ட வீடு 2025 ஒக்டோபர் 22 அன்று பயனாளிக்கு சம்பிரதாயபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது. இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதியும், இலங்கை பீரங்கி படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கே.வி.என்.பீ. பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி. விந்தியா பிரேமரத்ன அவர்களிடன் இணைந்து வீட்டின் சாவியை அடையாளமாக பயனாளி குடும்பத்திற்கு கையளித்தார்.