31st October 2025 16:06:08 Hours
இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவினரால் 2025 ஒக்டோபர் 25 அன்று பனாகொடை படையணி தலைமையக அதிகாரிகள் உணவகத்தில் இடம் கூட்டத்தின் போது நன்கொடை வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சிவில் ஊழியர் திரு. பிரதீப் அவர்களின் தந்தையின் மருத்துவ செலவுகளுக்கு உதவியாக ரூ. 25,000 பெறுமதியான காசோலை வழங்கப்பட்டது. மேலும் இலங்கை பீரங்கி படையணியின் நான்கு வீரர்கள் தங்கள் பிள்ளைகளுக்காக ரூ. 3,500 பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் எழுதுபொருட்கள் மற்றும் பரிசு வவுச்சர்களை பெற்றனர்.
இந்த நிகழ்வில் இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.