30th October 2025 14:22:46 Hours
பொதுமக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான அதன் தொடர்ச்சியான நலன்புரி முயற்சிகளின் ஒரு பகுதியாக, இராணுவ சேவை வனிதையர் பிரிவு 2025 ஒக்டோபர் 25 அன்று வெலிசறை சுவாச நோய்களுக்கான தேசிய மருத்துவமனையில் புனரமைப்பு பணிகளை ஆரம்பித்தது.
பாதுகாப்பு அமைச்சின் சேவை வனிதையர் பிரிவின் தலைவி வைத்தியர். ரசிகா பெரேரா அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த திட்டம், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி திசாநாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மருத்துவமனையின் வார்டு எண் 06 இல் புனரமைப்புப் பணிகளுடன் தொடங்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது, பாதுகாப்பு அமைச்சின் சேவை வனிதையர் பிரிவின் தலைவியும், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியும், புதுப்பித்தல் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு தங்கள் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டதுடன் நலன்புரி நோக்கத்திற்கான அவர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டினர்.
இந்த நிகழ்வில் சுவாச நோய்கள் தொடர்பான தேசிய மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் நிர்மலா யோகநாதன், சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், மருத்துவமனை ஊழியர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.