Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

30th October 2025 14:24:39 Hours

இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் நிதி நன்கொடை திட்டம்

இராணுவ சேவை வனிதையர் பிரிவு, அதன் தற்போதைய நலன்புரி திட்டங்களின் மற்றொரு கட்டத்தைக் குறிக்கும் வகையில், புதிய வீடுகளைக் நிர்மாணிப்பதற்கு ஆதரவளிக்கும் வகையில், 2025 ஒக்டோபர் 24 அன்று அதன் அலுவலக வளாகத்தில் நிதி நன்கொடை திட்டத்தை முன்னெடுத்தது.

இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி திசாநாயக்க ஆகியோர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டனர்.

இராணுவத் தளபதி மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, இந்தப் புதிய முயற்சியானது, பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்பவர்களுக்கு நிதி உதவி வழங்குவதன் மூலம் சேவை செய்யும் இராணுவ வீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த விழாவின் போது, இலங்கை இராணுவ போர் கருவி படையணியின் கோப்ரல் டபிள்யூ. பி. தர்மபிரிய, கஜபா படையணியின் கோப்ரல் எல். பீ. பஹலகெதர மற்றும் சிவில் ஊழியர் எச். பீ. திலகரத்ன ஆகியோருக்கு தலா ரூ. 1,500,000.00 பெறுமதியான மூன்று வீட்டுத் திட்டங்களை இராணுவத் தளபதி வழங்கினார்.

இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் பங்குபற்றினர்.