25th October 2025 13:59:50 Hours
பல்துறை மருத்துவ முகாம்களின் எட்டாவது கட்டம் புத்தளம் மாவட்டத்தை உள்ளடக்கி 2025 ஒக்டோபர் 21 ஆம் திகதி 58 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் நடாத்தப்பட்டது. இதில் சுமார் 2,000 அங்கவீனமுற்ற போர்வீரர்கள், ஓய்வுபெற்ற வீரர்கள் மற்றும் வீரமரணமடைந்த வீரர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு மருத்துவ பராமரிப்பு மற்றும் உதவிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவர் திருமதி சுவேந்திரினி திசாநாயக்க ஆகியோர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் போது, 16 சக்கர நாற்காலிகள், 100 ஊன்றுகோல்கள், 5 நடைபயிற்சி கருவிகள் மற்றும் 5 உதவி நடைபயிற்சி கருவிகள் ஆகியவை இராணுவ சேவை வனிதையர் பிரிவின் ஆதரவுடன் மற்றும் கொழும்பு விசாகா வித்தியாலயத்தின் 88 வது வகுப்பு குழுவினரின் நிதியுதவியு மற்றும் நன்கொடையாளர்களின் உதவியினால் வழங்கப்பட்டன.
மேலும், நிகழ்ச்சியின் போது ஒரு கண் மருத்துவ பரிசோதனையும் நடாத்தப்பட்டது. இதன் போது 300 மூக்குகண்ணாடிகள் விநியோகிக்கப்பட்டன. மேலும், அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
இராணுவ சேவை வனிதையர் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.