23rd October 2025 09:30:11 Hours
இலங்கை இராணுவ பொது சேவை படையணி சேவை வனிதையர் பிரிவு, 2 வது (தொ) இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் படையினருடன் இணைந்து, 2 வது (தொ) இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களை நன்கொடையாக வழங்கும் திட்டத்தை 2025 ஒக்டோபர் 19 ஆம் திகதி கட்டுநாயக்க 2 வது (தொ) இலங்கை இராணுவ பொது சேவை படையணியில் நடாத்தியது.
இந்நிகழ்வில் நிறைவேற்று பணிப்பாளர் நாயகமும் இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கேடிபீடி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். மேலும், இலங்கை இராணுவ பொது சேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி அஜந்தா டி சில்வா அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.
2024 ஆம் ஆண்டு க.பொ.த (சாதாரண தர) பரீட்சையிலும், 2025 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையிலும் சிறந்து விளங்கிய மாணவர்கள் பயனடைந்தனர். நிகழ்வின் போது, மாணவர்களுக்கு பாடசாலை புத்தகங்கள் மற்றும் ஏனைய எழுதுபொருட்கள் வழங்கப்பட்டன. மேலும், படையணியில் பணியாற்றும் சிவில் ஊழியர்களுக்கு சீருடைகளும் வழங்கப்பட்டன.
இலங்கை இராணுவ பொது சேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், சிவில் ஊழியர்கள் மற்றும் அவர்களது பிள்ளைகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.