23rd October 2025 11:33:11 Hours
இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவு, இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி இந்துனில் ஜயக்கொடி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2025 ஒக்டோபர் 18 ஆம் திகதி முல்லேரியாவ தேசிய மனநல நிறுவனத்தின் வார்ட் எண் 6 க்கு விஜயம் மேற்கொண்டது.
இந்த விஜயத்தின் போது, 32 நோயாளர்களுக்கு பத்திக் ஆடைகளும், வார்டுக்கு அத்தியாவசிய பொருட்களும் நன்கொடையாக வழங்கப்பட்டன. பின்னர்,நோயாளர்களுக்கு தேநீர் வழங்கப்பட்டு இலங்கை சிங்க படையணி கலிப்சோ இசைக்குழுவால் மகிழ்விக்கப்பட்டனர்.
இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவினர் சிரேஷ்ட உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.