Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

21st October 2025 14:14:09 Hours

இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையரால் காயமடைந்த சிவில் ஊழியருக்கு நிதியுதவி

1996 ஆம் ஆண்டு பரந்தனிலும், 1999 ஆம் ஆண்டு வவுனியாவிலும், 2006 ஆம் ஆண்டு முகமாலையிலும் தனது சேவைக் காலத்தில் எல்.ரீ.ரீ.ஈ தாக்குதல்களால் மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் காயமடைந்த சிவில் ஊழியர் திரு. ஜி. கீத் உதய குமார அவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சி, 2025 ஒக்டோபர் 13 ஆம் திகதி தொம்பகொடை இலங்கை இராணுவ போர் கருவி படையணி தலைமையகத்தில் நடைபெற்ற மாதாந்த கூட்டத்தின் போது நடைபெற்றது. இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஷிராணி நிர்மலீன் விஜேகோன் அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து, எதிர்கால நலன்புரி மற்றும் சுற்றுச்சூழல் முயற்சிகளுக்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக, அதிகாரிகள் உணவகத்திற்கு அருகிலுள்ள தோட்டப் பகுதிக்கு தலைவி மற்றும் உறுப்பினர்கள் விஜயம் மேற்கொண்டனர்.