14th October 2025 16:37:46 Hours
இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஆயிஷா லியனகே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவு 2025 ஒக்டோபர் 02 ஆம் திகதி ஞானோதயா சிறுவர்கள் மேம்பாட்டு நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டது.
நிகழ்வின் போது, சிறுவர்களுக்கு பரிசுப் பொதிகள் மற்றும் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.