14th October 2025 14:37:58 Hours
இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவினரால் ஒக்டோபர் 06 அன்று மின்னேரியா கன்னர்ஸ் கிளப்பில் இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி விந்தியா பிரேமரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் சிறுவர் தின கொண்டாடடப்பட்டது.
இந்த நிகழ்வில் சித்திர போட்டி, வேடிக்கை விளையாட்டுகள், மாயாஜால நிகழ்ச்சி, பிள்ளைகளின் செயல்பாடுகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன, இந் நிகழ்வு அனைவருக்கும் மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்கியது. இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவு, பாட்டா, மஞ்சி, மக்னா மற்றும் பொன்டெரா நிறுவனங்களின் நிதியுதவியில் பரிசு வவுச்சர்கள் மற்றும் பொதிகள் பங்கேற்பாளர்களிடையே விநியோகிக்கப்பட்டன.
இந்த கொண்டாட்டத்தில் 185க்கும் மேற்பட்ட சிறுவர்களும் 160 பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.