13th October 2025 07:12:02 Hours
இலங்கை இராணுவத்தில் பணியாற்றும் வீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், இலங்கை இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி திசாநாயக்க ஆகியோரின் பங்கேற்புடன் 2025 ஒக்டோபர் 09 ஆம் திகதி ஒரு நன்கொடை திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலுக்கமைய, வீட்டுவசதி மற்றும் மருத்துவத் தேவைகளுக்கான நிதியுதவிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய புதிய வீடுகள் நிர்மாணிப்பதற்காக ரூ. 600,000.00 நிதியுதவியும், பகுதியளவு நிர்மாணிக்கப்பட்ட வீடுகளுக்கு ரூ. 450,000 நிதியுதவியும் முன்னர் வழங்கப்பட்டது. இது இப்போது புதிய வீட்டுவசதிக்கு ரூ. 650,000.00 ஆகவும், பகுதியளவு கட்டப்பட்ட வீடுகளுக்கு ரூ. 500,000.00 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இராணுவத்தில் உள்ள சிவில் ஊழியர்களுக்கு, புதிய வீடுகளுக்கான நிதி உதவி முன்பு ரூ. 350,000.00 வழங்கப்பட்டது. இது இப்போது ரூ. 600,000.00 ஆகவும், பகுதியளவு கட்டப்பட்ட வீட்டுக்கு வழங்கப்பட்ட ரூ.300,000.00 தற்போது ரூ. 450,000.00 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் ஆரம்பமாக இரண்டு வீரர்களுக்கு புதிய வீட்டுக்கான உதவி வழங்கப்பட்டது. ஒவ்வொருவருக்கும் அவர்களின் புதிய வீடுகளுக்கு ரூ. 650,000.00 வழங்கப்பட்டது. மேலும் அனர்த்த முகாமைத்துவ பயிற்சி நிலையத்தின் ஒரு சிவில் ஊழியருக்கு புதிய வீட்டுக்காக ரூ. 600,000.00 நிதியுதவியும் வழங்கப்பட்டது.
மேலும், பகுதியளவு கட்டி முடித்த வீடுகளுக்காக 13 வீரர்களுக்கு தலா ரூ. 500,000.00 உதவியும், 9 சிவில் ஊழியர்களுக்கு பகுதியளவு கட்டப்பட்ட வீட்டுகளுக்காக தலா ரூ. 450,000.00 உதவியும் வழங்கப்பட்டது.
மேலும், 17 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் லான்ஸ் கோப்ரல் ஜே.விமலசிறியின் மகளின் சிகிச்சைக்காக ரூ. 100,000.00 மருத்துவ உதவி வழங்கப்பட்டது. அத்துடன், சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்ட சிவில் ஊழியரான திரு. ஜே.ஐ. பிரசாந்த அவர்களுக்கு ரூ. 100,000.00 மருத்துவ உதவி வழங்கப்பட்டது.
மேலும், 6 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் ஒரு சிப்பாயின் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு பால் மா வாங்குவதற்காக ஒரு வருடத்திற்கு ரூ. 96,000.00 (மாதம் ரூ. 8,000) வழங்கப்பட்டது.
மேலும், முந்தைய நலத்திட்டங்களின் கீழ், புதிய வீட்டுவசதி உதவி பெற்ற இரண்டு வீரர்கள் மற்றும் ஒரு சிவில் ஊழியருக்கு மேலதிக வீட்டுவசதிக்கான உதவி வழங்கப்பட்டது. அதன்படி, இரண்டு புதிய வீட்டின் வசதிகளுக்கு ரூ. 200,000.00 வழங்கப்பட்டது. மேலும் ஒரு புதிய வீட்டிற்கு ரூ. 150,000.00 வழங்கப்பட்டது. மூன்று வீரர்கள் தலா ரூ. 150,000.00 பகுதியளவு கட்டப்பட்ட வீட்டு வசதிக்கான உதவியைப் பெற்றனர். அதே நேரத்தில் மூன்று சிவில் ஊழியர்கள் பகுதியளவு கட்டப்பட்ட வீட்டு வசதிக்கான உதவியாக தலா ரூ. 100,000.00 பெற்றனர்.
வீட்டுவசதி மற்றும் மருத்துவ உதவி மூலம் இராணுவ வீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்களின் நலனை மேம்படுத்த மொத்தமாக ரூ. 12,746,000.00 (12.7 மில்லியன்) செலவிடப்பட்டது.
நிகழ்ச்சியின் முடிவில், இராணுவத் தளபதி, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி மற்றும் அனைத்து பங்கேற்பாளர்களும் தேநீர் விருந்துபசாரம் மற்றும் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.