11th October 2025 13:49:01 Hours
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, இலங்கை இராணுவ கவச வாகனப் படையணி சேவை வனிதையர் பிரிவு 2025 அக்டோபர் 05 அன்று மட்டக்குளிய ரொக் ஹவுஸ் முகாமில் சிறப்பு சிறுவர் தின நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.
இந்த நிகழ்வில் இலங்கை இராணுவ கவச வாகனப் படையணி சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி சுமங்கலி பத்திரவிதான பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிள்ளைகளுக்கான வேடிக்கை விளையாட்டுகள் மற்றும் இசை நிகழ்கள் உட்பட பொழுதுபோக்கு நடவடிக்கைகள் இடம்பெற்றன.
மேலும், ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒரு பரிசு வழங்கப்பட்டது. பிள்ளைகள் மற்றும் அவர்களின் பெற்றோர் இருவருக்கும் பரிமாறப்பட்ட ஒரு சுவையான மதிய உணவோடு நிகழ்வு நிறைவடைந்தது.
இந் நிகழ்வில் இலங்கை இராணுவ கவச வாகனப் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் அவர்களது பிள்ளைகளுடன் பங்கேற்றனர்.