11th October 2025 14:13:07 Hours
திசாவெவ 3 வது இலங்கை இராணுவ சேவை படையணியில் முன்மொழியப்பட்ட படையினருக்கான விடுமுறை விடுதியை நிர்மாணிப்பதற்காக இலங்கை இராணுவ சேவை படையணி சேவை வனிதையர் பிரிவு ரூ. 2,500,000.00 நிதியுதவியை வழங்கியுள்ளது.
இந்த நிதியுதவியை 2025 செப்டம்பர் 30 ஆம் திகதி இலங்கை இராணுவ சேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி அஜந்தா டி சில்வா அவர்கள் 3 வது இலங்கை இராணுவ சேவை படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் எம்.எம்.ஜே.எல். திசாநாயக்க யூஎஸ்பீ எல்எஸ்சீ அவர்களிடம் சம்பிரதாயபூர்வமாக வழங்கினார்.
இலங்கை இராணுவ சேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.