09th October 2025 14:07:43 Hours
இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவு, 2025 ஆம் ஆண்டு உலக சிறுவர் தினத்தை கொழும்பு பாதுகாப்பு சேவைகள் பாடசாலை கேட்போர் கூடத்தில் 2025 ஒக்டோபர் 04 ஆம் திகதி கொண்டாடியது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கை இராணுவ மகளிர் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எச்.எச்.கே.எஸ்.எஸ். ஹேவகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ்பீ அவர்கள் கலந்து கொண்டதுடன், அவருடன் இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சச்சேதா ஹேவகே அவர்களும் கலந்து கொண்டார்.
இலங்கை இராணுவ மகளிர் படையணியில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் 75 பிள்ளைகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். நிகழ்வின் போது, ஒவ்வொரு பிள்ளைக்கும் சிறப்பு பரிசில்கள் வழங்கப்பட்டன, அதனைத் தொடர்ந்து "சட்டம்-தாக்கம்" என்ற கருப்பொருளில் திரு. வசந்த மொரகொட மற்றும் அவரது குழுவினரால் ஊக்கமளிக்கும் அமர்வு நடாத்தப்பட்டது.
சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள், அவர்களது பிள்ளைகளுடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.