08th October 2025 11:25:18 Hours
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவினால் இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி ஆயிஷா லியனகே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், படையணி உறுப்பினர்களின் பிள்ளைகளின் சிறந்த கல்வி சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் புலமைப்பரிசில் வழங்கும் விழாவை நடத்தினர்.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவத்தின் தலைமை சமிக்ஞை அதிகாரியும் இலங்கை சமிக்ஞை படையணி படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜீஎல்எஸ்டபிள்யூ லியனகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் கலந்துகொண்டார்.
2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த (சா/த) பரீட்சை மற்றும் க.பொ.த (உ/த) பரீட்சைகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு, அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கல்வியில் சிறந்து விளங்கியதற்காக ரொக்கப் பரிசுகள், சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.