08th October 2025 11:23:11 Hours
விஜயபாகு காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவு உறுப்பினர்கள், உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு மஹரகம அபேக்ஷா மருத்துவமனையில் உள்ள சீசீசீ இல்லத்தில் 2025 அக்டோபர் 02, அன்று ஒரு நன்கொடை நிகழ்ச்சியை நடத்தினர்.
சிகிச்சை பெறும் பிள்ளைகள் மற்றும் அவர்களின் பெற்றோரின் மன உறுதியையும் நல்வாழ்வையும் மேம்படுத்துவதற்காக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்வின் ஒரு பகுதியாக விஜயபாகு காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவு பிள்ளைகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு சிற்றுண்டிகளையும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கியது.
இந்த நிகழ்வு விஜயபாகு காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி தமயந்தி பண்டாரநாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்டது.
இந் நிகழ்ச்சியில் விஜயபாகு காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.