05th October 2025 14:06:19 Hours
இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவினர் 2 வது (தொ) இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி மற்றும் நாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலையுடன் இணைந்து 2025 செப்டம்பர் 29 அன்று கரந்தெனிய அம்பலாங்கொடையில் இரத்த தான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.
இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நிரோஷிகா கருணபால அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த இரத்ததான நிகழ்வில் சுமார் 100 நன்கொடையாளர்கள் இரத்த தானம் செய்தனர். இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.