03rd October 2025 14:32:11 Hours
இலங்கை இராணுவ பொதுசேவை படையணி சேவை வனிதையர் பிரிவினரால் 2025 செப்டம்பர் 27 ஆம் திகதி அன்று பனாகொடை உடற்பயிற்சி நிலையத்தில் சிறுவர் தினக் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் இலங்கை இராணுவ பொதுசேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி துஷாரி அபேசிங்க பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இந்த கொண்டாட்டத்தில் கலைப் போட்டி, மாயஜாலம், இராணுவ இசைக்குழு பணிப்பகத்தினரின் நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் ஒரு டிஜே இசை நிகழ்ச்சி உள்ளிட்ட பொழுதுபோக்கான தொடர் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
பிள்ளைகளுக்கு ரூ.1000 க்கு பெறுமதியான வங்கி சேமிப்பு புத்தகமும் வழங்கப்பட்டது. சிற்றுண்டிக்குப் பின்னர் நிகழ்வு நிறைவடைந்தது.
இலங்கை இராணுவ பொதுசேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட பிள்ளைகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.