02nd October 2025 15:46:53 Hours
இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவு, 3 வது (தொ) இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியின் படையினருடன் இணைந்து, இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நிரோஷிகா கருணபால அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2025 செப்டம்பர் 20 ஆம் திகதி எழுதுபொருட்கள் வழங்கும் நன்கொடை திட்டத்தை நடாத்தியது.
இந்த நிகழ்வின் போது மொத்தம் எட்டு பிள்ளைகள் பரிசுப் பொதிகளைப் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்வைத் தொடர்ந்து, அனைத்து உறுப்பினர்களும் நீர் அழகிப்பாசி திட்டத்தைப் பார்வையிட்டனர். இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.