02nd October 2025 15:29:22 Hours
76 வது இராணுவ ஆண்டு நிறைவு விழா மற்றும் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு இராணுவ சேவை வனிதையர் பிரிவு 2025 செப்டம்பர் 30 ஆம் திகதி பமுனுகம சுரச பாலிகா சிறுவர் மேம்பாட்டு மையத்தின் சிறுவர்களுக்கான இசை மாலை மற்றும் பரிசில்கள் வழங்கும் விழாவை ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி திசாநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிரதம விருந்தினர் வருகை தந்ததும், இரண்டு சிறுவர்கள் தாம்பூலம் வழங்கி அன்புடன் வரவேற்றனர். இசை நிகழ்ச்சியுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து, போரெவர் ஸ்கின் நேசியூரல் தனியார் நிறுவனத்தின் நிதியுதவியுடன் சீருடை துணிகள் மற்றும் அழகு சாதனங்கள் அடங்கிய பரிசுப் பொதிகள் சிறுவர்களுக்கு வழங்கப்பட்டன. மேலும், அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பரிசுப் பொதிகள் நிலையத்தின் ஊழியர்களுக்கு அவர்களின் அர்ப்பணிப்புடைய சேவையைப் பாராட்டும் விதமாக வழங்கப்பட்டன.
பின்னர் குழுப்படம் எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், சிறுவர்களுக்கு இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் வழங்கப்பட்ட இரவு உணவுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.