01st October 2025 11:54:18 Hours
பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவினர் 2025 செப்டம்பர் 25, அன்று பனாகொடை படையணி தலைமையகத்தில் உதவித்தொகை வழங்கும் நிகழ்வை முன்னெடுத்தனர்.
2024 கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சையில் 9 ஏ சித்திகளையும் 2024 கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையில் 3 ஏ சித்திகளை பெற்ற அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் மொத்தம் 45 பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்கியதற்காக அங்கீகரிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மனித திறன் மேம்பாட்டு பயிற்சி நிபுணரான திரு. சனத் கமகே அவர்களின் "உங்கள் சிறந்ததை எவ்வாறு அடைவது" என்ற தலைப்பில் ஒரு ஊக்கமளிக்கும் சொற்பொழிவும் இடம்பெற்றது.
பொறியியல் சேவைகள் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கேஏஎன் ரசிக குமார என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்வு பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி அனுபமா ரத்நாயக்க அவர்களின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டது.