Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

26th September 2025 16:00:50 Hours

இலங்கை இராணுவ சேவை படையணி சேவை வனிதையரினால் உதவி திட்டம்

இலங்கை இராணுவ சேவை படையணி சேவை வனிதையர் பிரிவினால் 7 வது இலங்கை இராணுவ சேவை படையணியில் பணியாற்றும் 13 ஓட்டுநர்களுக்கு சிவில் இலகுரக வாகன உரிமங்களிலிருந்து சிவில் கனரக வாகன ஓட்டுநர் உரிமங்களாக மேம்படுத்துவதற்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை 2025 செப்டம்பர் 20 அன்று 7 வது இலங்கை இராணுவ சேவை படையணியில் நடத்தியது.

இதற்கு இணையாக, புற்றுநோய் சங்கத்தால் நடத்தப்பட்ட மார்பகப் புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆரம்பகால கண்டறிதல் குறித்த விழிப்புணர்வு சொற்பொழிவு, சுகாதார விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்கும் படையினர் மற்றும் அவர்களது குடும்பங்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இலங்கை இராணுவ சேவை படையணி சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி. அஜந்த த சில்வா, இலங்கை இராணுவ சேவை படையணி சேவை வனிதையர் பிரிவு உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.