26th September 2025 15:58:59 Hours
விஷேட படையணி சேவை வனிதையர் பிரிவு உறுப்பினர்கள் 2025 செப்டம்பர் 24 அன்று பாங்கொல்ல, அபிமன்சல-3 நல விடுதிக்கு விஜயம் மேற்கொண்டனர்.
இந்த விஜயத்தின் போது, பிரதான வைத்தியசாலை, டிபீஎம் பிரிவு, ஆயுர்வேத மருத்துவமனை, செயற்கை உறுப்புகள் மற்றும் எலும்பு முறிவு பட்டறை மற்றும் அபிமான் சில்ப பியச இது உள்நாட்டு போர் வீரர்களுக்கான படைப்பு மறுவாழ்வு மற்றும் திறன் மேம்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட இடம் உள்ளிட்ட முக்கிய வசதிகளை அவர்கள் பார்வையிட்டனர். மேலும் நன்றி பாராட்டும் முகமாக அத்தியவாசிய அன்றாடப் பொருட்கள் அடங்கிய பரிசுப் பொதிகள் போர் வீரர்களுக்கு வழங்கப்பட்டன.
தேநீர் விருந்துபசாரத்துடன் நிகழ்வு நிறைவடைந்ததுடன் தொடர்ந்து விஷேட படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் முன்னாள் போர் வீரர்களுடன் கலந்துரையாடல் மேற்கொண்டார். பின்னர் நல விடுதியின் இசைக்குழுவான "பிரேவ் பீட்" ஒரு மணி நேர இசை நிகழ்ச்சியை நிகழ்த்தியது.
இந்நிகழ்வில் விஷேட படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.