Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

26th September 2025 15:54:50 Hours

இலங்கை இலோசாயுத காலாட் படையணி சேவை வனிதையரினால் தரம் 5 புலமைப்பரிசில் சாதனையாளர்கள் கௌரவிப்பு

இலங்கை இலோசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவினால் 2025 செப்டம்பர் 19 அன்று சேவையில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்களின் பிள்ளைகளின் கல்வி சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. 2023 ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஐம்பது மாணவர்களுக்கு பாடசாலை உதவி பொருட்கள் மற்றும் பரிசு வவுச்சர்கள் வழங்கப்பட்டன.

இந் திட்டத்திற்கு திரு. ஹிமெத் மெண்டிஸ் மற்றும் திரு. டிசாத் மெண்டிஸ் ஆகியோரிடமிருந்து மேலதீக ஆதரவு கிடைத்தது. இந் நிகழ்வில் நிறைவேற்று பணிப்பாளர் நாயகமும் இலங்கை இலோசாயுத காலாட் படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் கேடிபீடி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ மற்றும் இலங்கை இலோசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி. தர்ஷனி யஹம்பத் ஆகியோர் கலந்து கொண்டனர்.