Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

25th September 2025 13:51:46 Hours

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையரால் உளவியல் தொடர்பான விரிவுரை

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவினரால் 2025 செப்டம்பர் 18 அன்று உடவளவை இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி தள பட்டறை வளாகத்தில் உளவியல் விரிவுரையை நடத்தப்பட்டது.

விரிவுரையினை சகோதரர் சார்லஸ் தோமஸ் நிகழ்த்தியதுடன் அதைத் தொடர்ந்து இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் படைத் தளபதியும் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் சி. களுத்தரஆராச்சி, இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சிவந்தி களுத்தரஆராச்சி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.