Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

22nd September 2025 20:29:14 Hours

இலங்கை இராணுவ கவச வாகனப் படையணி சேவை வனிதையரினால் மொரவெவ மாணவர்களுக்கு உதவி

இலங்கை இராணுவ கவச வாகனப் படையணி சேவை வனிதையரினால் மொரவெவ, டிராக் 06 வித்தியாலயத்தில், 2025 செப்டம்பர் 21 அன்று பாடசாலை புத்தகங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் நிகழ்ச்சியை நடத்தியது. இலங்கை இராணுவ கவச வாகனப் படையணி சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி சுமங்கலி பத்திரவிதானா அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.

பதினேழு பாடசாலை பிள்ளைகள் தங்கள் கல்வித் தேவைகளுக்கு உதவும் வகையில் அத்தியாவசிய புத்தகங்கள் மற்றும் பொருட்களைப் பெற்றனர். நிகழ்ச்சியில் திரைப்படத் திரையிடலும் இடம்பெற்றதுடன் பிள்ளைகள் மற்றும் அவர்களது பெற்றோர் அதை ரசித்தனர். அனைத்து பிள்ளைகளுக்குமான மதிய உணவுடன் நிகழ்வு நிறைவடைந்தது.