Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

18th September 2025 16:28:06 Hours

இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையரால் நன்கொடை நிகழ்ச்சித்திட்டம்

இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவு, மின்னேரியா அடிப்படை ஆயுர்வேத மருத்துவமனைக்கு 2025 செப்டம்பர் 15 ஆம் திகதி ரூ.25,000.00 பெறுமதியான இரண்டு எரிவாயு அடுப்புகளை நன்கொடையாக வழங்கியது.

இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதியும், இலங்கை பீரங்கி படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கே.வி.என்.பீ. பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பூ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி விந்தியா பிரேமரத்ன அவர்களுடன் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.

மேலும், சேவை வனிதையர் பிரிவின் பொலன்னறுவை மாவட்ட வாதிஹிட்டி பாலமண்டலயாவிற்கு 500 சன்குயிக் பாக்கெட்டுகளை வழங்கியது. இந்த நன்கொடையை அங்கு வசிக்கும் ஒரு பிரதிநிதி பெற்றார். இது மின்னேரியா அபயராம விஹாரையில் 2025 செப்டம்பர் 17 ஆம் திகதி நடைபெற்ற கலாசார நிகழ்ச்சியின் போது வழங்கப்பட்டது.