18th September 2025 16:25:21 Hours
பொலன்னறுவை, ஹிங்குராக்கொடை, பலுவத்தன பிரதேசத்தில் ஒரு ஏழைக் குடும்பத்திற்கு இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவு ஒரு புதிய வீட்டைக் கட்டியது. 7 வது இலங்கை பீரங்கி படையணியின் கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் 7 வது இலங்கை பீரங்கி படையணி படையினரால் மனிதவள உதவி வழங்கப்பட்டது.
இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதியும், இலங்கை பீரங்கி படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கே.வி.என்.பீ. பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பூ என்பீஎஸ் பீஎஸ்சீ மற்றும் இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவர் திருமதி விந்தியா பிரேமரத்ன ஆகியோர் நிர்மானிக்கப்பட்ட புதிய வீட்டை 2025 செப்டம்பர் 11 ஆம் திகதி திறந்து வைத்தனர்.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், அரச அதிகாரிகள், இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிப்பாய்கள் மற்றும் பயனாளி மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.