Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

13th September 2025 10:46:51 Hours

விஜயபாகு காலாட் படையணி சேவை வனிதையரால் தியத்தலாவை தள மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள்

விஜயபாகு காலாட் படையணி சேவை வனிதையரால் தியத்தலாவை தள மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்கள் மற்றும் உபகரணங்கள் 2025 செப்டெம்பர் 10 ஆம் திகதி நன்கொடையாக வழங்கப்பட்டன.

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை குடிமக்களால் நிதியுதவி வழங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் போது, 12 லட்சம் பெறுமதியான ஒரு சலவை இயந்திரம், 30 மெத்தைகள், சக்கர நாற்காலிகள் மற்றும் ஏனைய மின்சார உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வானது விஜயபாகு காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தமயந்தி பண்டாரநாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றது. மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியும் விஜயபாகு காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கே.ஏ.டபிள்யூ.என்.எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.