11th September 2025 14:25:54 Hours
இலங்கை இராணுவ கவச வாகனப் படையணி சேவை வனிதையர் பிரிவினால் அனுராதபுரம் கலத்தேவ, 3 வது இலங்கை இராணுவ கவச வாகனப் படையணியில் 2025 செப்டம்பர் 07 அன்று "மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான பாதை" என்ற கருப்பொருளில் ஒரு சிறப்பு விரிவுரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிப்பாய்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் உட்பட கிட்டத்தட்ட 100 பங்கேற்பாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
குடும்ப சுகாதார சேவை அதிகாரி, உளவியல் ஆலோசகரும் சுகாதார பத்திரிகையாளர் திருமதி நிலுக்ஸி திலகசிறி இந்த விரிவுரையை நிகழ்த்தினார். மூன்று மணி நேர அமர்வு மனநலம், குடும்ப ஆரோக்கியம் மற்றும் சமநிலையான வாழ்க்கை முறையை உருவாக்குவதற்கான வழிகள் பற்றிய மதிப்புமிக்க அறிவுகளை வழங்கியது.
இந்த நிகழ்வு இலங்கை இராணுவ கவச வாகனப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுமங்கலி பத்திரவிதான அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்டது.