Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

10th September 2025 12:39:20 Hours

இலங்கை கவச வாகன படையணி சேவை வனிதையரால் நலன்புரி திட்டம்

இலங்கை கவச வாகன படையணி சேவை வனிதையர் பிரிவு 2025 ஆகஸ்ட் 30 ஆம் திகதி குறைந்த வருமானமுடைய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்காக தேமுன்னேவ ஆரம்ப பாடசாலையில் ஒரு நன்கொடைத் திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

கவச வாகன படையணியின் பயிற்சி நிலையம், 3 வது இலங்கை கவச வாகன படையணி மற்றும் 7 வது (தொ) இலங்கை கவச வாகன படையணி ஆகியவற்றின் பங்களிப்புடன் மா மற்றும் தென்னம் பிள்ளைகள் வழங்கலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து பிள்ளைகளுக்கு சிறுவர் திரைப்படம் திரையிடப்பட்டது. பின்னர் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

ஒவ்வொரு மாணவருக்கும் புத்தகங்கள், எழுதுபொருட்கள் மற்றும் துணிகள் அடங்கிய ஒரு பொதி பரிசாக வழங்கப்பட்டது. மேலும் அவர்களது குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களுடன் கூடிய உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. மாணவர்களுக்கு இனிப்புக்கள் வழங்கப்பட்டதுடன் நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன.

இலங்கை கவச வாகன படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுமங்கலி பத்திரவிதான அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் இலங்கை கவச வாகன படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.