10th September 2025 12:16:41 Hours
இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் 2025 செப்டெம்பர் 04 ஆம் திகதி ராகம ரணவிரு செவனவிற்கு விஜயம் மேற்கொண்டனர்.
இந்த விஜயத்தின் போது சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களும் அவர்களது குடும்பத்தினரும் நலவிடுதியில் உள்ளவர்களுடன் உரையாடினர். பின்னர், ஒவ்வொரு போர் வீரருக்கும் பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டதுடன், மேலும் போர்வீரர்கள், அவர்களின் உதவியாளர்கள் மற்றும் நல விடுதியின் ஊழியர்களுக்கு சிற்றுண்டிகளும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சித்திட்டம் இலங்கை சமிக்ஞை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஆயிஷா லியனகே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.