05th September 2025 11:46:21 Hours
இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் பிரிவினரால் கல்கமுவ பிரதேசத்தில் 2025 செப்டெம்பர் 02 அன்று சிப்பாய் எச்.எஸ். ரத்நாயக்கவுக்கான புதிய வீட்டை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லை நாட்டினர்.
இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி குமாரி பல்லேகும்புர அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி திசாநாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இந்த வீட்டுத் திட்டத்திற்கு இராணுவ சேவை வனிதையர் பிரிவு நிதியுதவி வழங்கியது.
இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் நலம் விரும்பிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.