02nd September 2025 15:54:28 Hours
பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவு, 2025 ஆகஸ்ட் 29 ஆம் திகதி பனாகொடை படையணி தலைமையகத்தில் “சமநிலையில் வாழ்வது மற்றும் தொழில் - வாழ்க்கை சமநிலை” என்ற தலைப்பில் ஒரு விரிவுரையை ஏற்பாடு செய்திருந்தது.
உரையாற்றிய திரு. அமிந்த சுகத் டி சில்வா அவர்கள் விவேகமான நிதி நிர்வாகத்தின் முக்கியத்துவத்தையும், தொழில்முறை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடையில் சமநிலையைப் பேணுவதையும் எடுத்துரைக்கும் விரிவுரையை நிகழ்த்தினார்.
பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி அனுபமா ரத்நாயக்க, பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.