Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

26th August 2025 14:34:13 Hours

இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையரால் நன்கொடை திட்டம்

இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவு 2025 ஆகஸ்ட் 15 ஆம் திகதி வெயங்கொடை இராணுவ ஆயுதத் தொழிற்சாலையின் கலந்துரையாடல் மண்டபத்தில் நன்கொடை வழங்கும் நிகழ்ச்சியை நடாத்தியது.

இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நிர்மலின் விஜேகோன் அவர்கள் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வின் போது, பதினைந்து சிவில் ஊழியர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மறைந்த கோப்ரல் எம்.யூ.டபிள்யூ.கே. பெர்னாண்டோ (ஓய்வு) அவர்களின் மகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. இலங்கை இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.