Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

26th August 2025 11:47:26 Hours

கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையரால் உதவித்தொகை

கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவு “சேவா வனிதா சிசு அபிமன்- 2025” (நிலை II) உதவித்தொகை வழங்கும் நிகழ்வை, 2025 ஆகஸ்ட் 17 ஆம் திகதி கெமுனு ஹேவா படையணி தலைமையக பரடைஸ் மண்டபத்தில் கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி கலாநிதி (திருமதி) தில்ருக்ஷி விமலரத்ன அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

2024 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஒன்பது "ஏ" சித்திகளைப் பெற்று சிறந்த பெறுபேறுகளுடன் தேர்ச்சி பெற்ற கெமுனு ஹேவா படையணி வீரர்களின் 13 பிள்ளைகளின் கல்வித் திறனை அங்கீகரித்து, வெகுமதி அளிக்கும் வகையில் இந்த நிகழ்வு நடாத்தப்பட்டது. இந்த நிகழ்வின் போது, ரூ. 25,000.00 பெறுமதியான பண வவுச்சர் மற்றும் புத்தகப் பொதிகள் பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் காலாட்படை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமும் கெமுனு ஹேவா படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.ஜே.கே விமலரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, கெமுனு ஹேவா படையணியின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.